×

2023ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது‘நீர்வழிப்படூஉம்’ நாவலுக்காக தமிழ் எழுத்தாளர் தேவிபாரதிக்கு அறிவிப்பு!!

டெல்லி :தமிழ் எழுத்தாளர் தேவிபாரதியின் நீர்வழிப் படூஉம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ஒன்றிய அரசின் சார்பில், இந்தியாவின், 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கு, சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில், 2023ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் தேவிபாரதியின் நீர்வழிப் படூஉம் நாவலுக்கு வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையை சேர்ந்த எழுத்தாளர் தேவி பாரதியின் இயற்பெயர் ராஜசேகரன்(வயது 66). இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பல நூல்களை எழுதி உள்ளார். நிழலின் தனிமை, அற்ற குளத்து அற்புத மீன்கள், பிறகும் ஒரு இரவு, நொய்யல் உள்ளிட்ட நாவல்களையும் இவர் எழுதியுள்ளார்.

இதே போல் புழுதிக்குள் சில சித்திரங்கள்,சினிமா பாரடைசோ உள்ளிட்ட கட்டுரைத்தொகுப்புகளையும் எழுதியுள்ளார். ‘காலச்சுவடு’ இதழின் பொறுப்பாசிரியராகப் ஏழாண்டு காலம் பணிபுரிந்துள்ளார். தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘கனவே கலையாதே’ திரைப்படத்தில் கதாசிரியராகவும் பணியாற்றியுள்ளார் தேவிபாரதி ’நீர் வழிப் படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதி சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், எழுத்தாளர் வண்ணதாசன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வரும் 2024ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் விருது, பரிசுத்தொகை வழங்கப்படும்.அதே போல் மலையாளத்தில் இ.வி. ராமகிருஷ்ணனுக்கு, தெலுங்கில் பதஞ்சலி சாஸ்திரிக்கும்,கன்னட மொழியில் லட்சுமிஷா தொல்பதிக்கும், ஹிந்தியில் சஞ்சீவுக்கும் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

The post 2023ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது‘நீர்வழிப்படூஉம்’ நாவலுக்காக தமிழ் எழுத்தாளர் தேவிபாரதிக்கு அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Devibarati ,Delhi ,EU government ,India ,Devi Barati ,
× RELATED ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா செல்ல...